Loading...
யாழ்.பல்கலைகழகத்திற்கு முன்பாக உள்ள குமாரசாமி வீதியில் இளைஞர் ஒருவர் சிவில் உடை தரித்த குழுவினால் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீதி வழியாக 28 வயது மதிக்கதத்தக்க இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த வேளை அவரை பின்தொடர்ந்து பச்சை நிற முச்சக்கர வண்டியில் வந்த மூவர் அடங்கிய சிவில் உடை தரித்தவர்கள் இளைஞரை மோட்டார் சைக்கிளில் இருந்து தள்ளி விழுத்தி பின் புறமாக கைவிலங்கிட்டு முச்சக்கர வண்டியில் ஏற்றி சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
Loading...
இது தொடர்பில் யாழ்.போலீசார் மற்றும் கோப்பாய் பொலிசாரை கேட்ட போது தாம் அவ்வாறு யாரையும் கைது செய்யவில்லை என தெரிவித்துள்ளனர்.
Loading...