இந்தியாவில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளாரக இருக்கும் ஜாக்குலின் தற்போது அந்த தொலைக்காட்சியில் இருந்து வெளியேறியதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சில நாட்களுக்கு முன் ஒளிபரப்பான கலக்கபோவதுயாரு நிகழ்ச்சியில் ஜாக்குலின் மற்றும் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட ஜான்விஜய்யுடன் டான்ஸ் ஆடினார்.
அப்போது அவரை தொட்டு ஆட தொடங்கியதால், ஜாக்குலின் நேரடியாக என்னை தொடாமல் ஆடுங்கள் என்றார்.
மேலும் அவர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வேறு ஒரு நிகழ்ச்சியிலும் அவரை இரட்டை அர்த்தத்தில் கலாய்த்தார் ஜெகன். தொடர்ந்து அவரை இப்படி எல்லாம் கலாய்பதால் தான் அவர் வெளியேறிவிட்டதாக கூறுகின்றனர்.
ஜாக்குலின் படங்கள் நடிப்பதில் ஆர்வம் காட்டுவதால் தான் பிரபல ரிவியை விட்டுவெளியேறியதாக சிலர் கூறுகின்றார்.
இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை என்றாலும் அவர் தொகுத்துவழங்கிய கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தற்போது அவருக்கு பதிலாக சிவரஞ்சனி தொகுத்துவழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.