Loading...
புத்தாண்டில் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை ரஜினி வெளியிடுவார் என்று ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணராவ் கூறியுள்ளார்.
ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்துகொள்ள ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணராவ் கெய்க்வாட் தர்மபுரி வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
Loading...
ரசிகர்கள் மட்டுமின்றி அனைவருடைய அன்புக்கும் உரியவராக ரஜினி உள்ளார். அவர் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் நல்லது செய்வார். மக்கள் அவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
ரஜினியின் அரசியல் அறிவிப்பை டிசம்பரில் அவர் பிறந்தநாளன்று வெளியிட வாய்ப்பில்லை. ஆனால் அரசியல் அறிவிப்பு ஜனவரியில் வெளியாகலாம் என்று தகவல் தெரிவித்துள்ளார்.
Loading...