யாழ்ப்பாண பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் ஆவா குழு உறுப்பினர்கள் மூன்று பேர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோப்பாய், யாழ்ப்பாணம், மானிப்பாய் போன்ற பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு, கொள்ளை சம்பவங்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
22 வயதுடைய ஆப்டீன் மொஹமட் இக்ராம், 20 வயதுடைய சிவக்குமார் கதியோன் மற்றும் 17 வயதுடைய இராசேந்திரன் சிந்துயன் ஆகிய மூன்று பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்பட உள்ளதுடன், யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.