இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள வலிகாமம் வடக்குப் பிரதேசத்தின் வசாவிளான் கிராமத்தின் 29 ஏக்கர் நிலப் பகுதி இன்று (30) இராணுவத்தினரால் விடுவிக்கப்படுள்ளது.
வசாவிளான் உத்தரமாதா தேவாலயம், றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மற்றும் துஃ245 கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட நிலப் பகுதிகள் இன்று இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.
யாழ். ஆயர் உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட தொடர் முயற்சியின் பலனாகக் கடந்த 30 ஆண்டுகளின் பின்னர் குறித்த பகுதியை விடுவிப்பதற்கு இராணுவத்தினர் இணங்கியுள்ளனர். எனினும், வசாவிளானின் எஞ்சிய பகுதி விடுவிக்கப்படாமை தொடர்பில் பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
நில விடுவிப்பு நிகழ்வில் யாழ் மாவட்ட இராணுவ தளபதி, யாழ் அரச அதிபர், உதவி அரசாங்க அதிபர், வலி வடக்கு பிரதேச செயலர் உள்ளிட்ட அரச அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்