முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் சாவகச்சேரி உள்ளூராட்சி தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.
இன்றைய தினம் மாலை 3 மணிக்கு யாழ். மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல் திணைக்கள மாவட்ட அலுவலகத்தில் கட்டுப் பணத்தை செலுத்தியுள்ளது.
ஈ.பி.டீ.பி கட்சியிலிருந்து விலகிய தம்பித்துரை ரஜீவ் தலைமையிலான குழு இந்த வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த தம்பித்துரை ரஜீவ் கூறுகையில்,
மகிந்த ராஜபக்ஷவினால் மட்டுமே தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்று கொடுக்க இயலும். இந்த ஆட்சியாலும் வேறு யாராலும் கூட அது இயலாத விடயம்.
அதேபோல் அபிவிருத்தியும் கூட மகிந்த ராஜபக்ஸவினாலேயே முடியும். நாங்கள் வெற்றி பெற்றால் சாவகச்சேரி நகரை அபிவிருத்தி செய்வோம் என்றார்.