நாட்டில் ஊழியர்கள் கடமை புரியும் நேரம் குறைக்கப்பட வேண்டும் என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினரான பிமல் ரத்நாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே பிமல் ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மனித உழைப்பின் நேரம் குறைக்கப்பட்டு வருவதாகவும் பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் இலங்கையில் மட்டும் மனித உழைப்பின் நேரம் மேலும் அதிகரிக்கப்படுவதாகவும் பிமல் ரத்நாயக்க கவலை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் தனியார் துறைகளில் கடமையாற்றும் ஊழியர்கள் ஒன்பது மணிநேரம் வரை பணியாற்ற நிர்ப்பந்திக்கப்படுவதாக குறிப்பிட்ட பிமல் ரத்நாயக்க அரச ஊழியர்களுக்கு அவ்வாறான நிலை இல்லை இருந்த போதும் அவர்கள் போக்குவரத்தில் கணிசமான நேரம் செலவிட வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்குப் பதிலாக ஊழியர்களின் கடமை நேரத்தை 08 மணி நேரத்தில் இருந்து ஆறு மணிநேரமாக குறைக்க வேண்டுமெனவும் உழைப்புக்கேற்ப ஊதியம் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.