நாட்டில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திகபத்திரண, யாழ்ப்பாணத்தில் ஹெரோய்ன் டொபி வகைகள் விற்பனை செய்யப்படுவதாக அதிர்ச்சித் தகவலையும் வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில், ஹெரோயின் கலந்த 50 டொபிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இ
துவும் மாணவர்களை இலக்குவைத்தே முன்னெடுக்கப்படுகின்றது என்று அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினரது இந்தக்கூற்று தொடர்பில் கருத்துவெளியிட்ட கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில், கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு, அவற்றை முற்றாகத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.