மட்டக்களப்பு, நாவலடியில் இன்று காலை கரைவலை தொழிலில் ஈடுபட்ட அனைத்து மீனவர்களின் வலைகளிலும் பாம்புகள் மட்டுமே பிடிபட்டுள்ளன.
அண்மைக்காலமாக கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் பாரிய துன்பங்களுக்கு மத்தியில் தங்களது வாழ்கையினை கொண்டு செல்கின்ற நிலையில் இன்றும் மீன்கள் பிடிபடாமை பாரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
இந்த நிலையில், அரசாங்கமும் தங்களுக்கு எந்தவிதமான உதவிகளையும் வழங்குவது இல்லை என்று மீன்பிடி தொழிலை ஜீவனோபாயமாக கொண்ட மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் இவ்வாறு அதிகளவிலான பாம்புகள் ஏன் பிடிபடுகின்றன என்பது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் மற்றும் இலங்கையில் சுனாமி அனர்த்தம் ஏற்படலாம் என அண்மைக்கால பல தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் பெருந்தொகை பாம்புகள் கடற்கரையை அண்மித்த பகுதியில் பிடிபட்டுள்ளன. இது ஆபத்தின் வெளிப்பாடாக இருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரனர்த்தத்தின் போதும் இவ்வாறு பெருந்தொகை பாம்புகள் கரைக்கு வந்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.