விசேட வழக்கு விசாரணைகளை துரிதமாக மேற்கொள்வதற்காக எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் மூன்று நீதிபதிகள் கொண்ட மூன்று நீதிமன்றங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு விவகார அமைச்சர் தலத்தா அத்துகோரல இதனைத் தெரிவித்தார்.
இன்றைய தினம் 400 மில்லியன் ரூபா செலவில் மாத்தளையில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய நீதிமன்ற கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டார்.
மகளிர் மற்றும் சிறார் துஸ்பிரயோகம் தொடர்பாக 19000 முறைப்பாட்டு ஆவணங்கள் சட்டமா அதிபர் காரியாலயத்தில் கிடப்பில் உள்ளதாகவும், அவற்றை விசாரிப்பதற்கு தனியான பிரிவொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் நீதிமன்ற அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன, மேல் நீதிமன்ற நீதியரசர் சரோஜினி குசலா வீர்வர்தன, பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சனி அலுவிகார, விவசாய ராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிகார உள்ளிட்ட தரப்பின்ர கலந்து கொண்டனர்.