Loading...
உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவது சம்பந்தமான இரண்டு வர்த்தமானி அறிவித்தல்களை நாளை 4 ஆம் திகதி திங்கட்கிழமை வெளியிடவுள்ளதாக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.
எல்லை நிர்ணயம் தொடர்பாக ஜனாதிபதியால் இதற்கு முன்னர் முன்வைத்த அறிக்கை மற்றும் எல்லை நிர்ணய ஆய்வுக்குழுவால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை உள்ளடக்கி குறித்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதாக செயலாளர் தெரிவித்துள்ளார்.
Loading...
ஒரு வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினாலும் மற்ற வர்த்தமானி அறிவித்தல் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சராலும் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Loading...