இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது டெல்லியில் நடந்து வருகிறது. டெல்லியில் நிலவி வரும் மாசு காரணமாக கிரிக்கெட் வீரர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அங்கு மிகவும் அதிக அளவில் புகை காணப்படுகிறது. மைதானத்தில் இருக்கும் நபர்களை கூட சரியாக பார்க்க முடியாத அளவுக்கு மாசு அங்கு நிலவி வருகிறது.
இதன் காரணமாக வீரர்கள் சுவாசிப்பது தொடங்கி, விளையாடுவது வரை அனைத்தும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
டெல்லியில் தற்போது மிகவும் மோசமான அளவிற்கு புகை நிலவி வருகிறது. இதன் காரணமாக முதல் நாள் போட்டியில் வீரர்கள் மிகவும் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். இலங்கை வீரர்கள் அனைவரும் முகத்தை மாஸ்க்கால் மூடிக்கொண்டு விளையாடினார்கள். அதேபோல் களத்தில் இருந்த அம்பயர்களும் முகத்தை மூடிக்கொண்டு விளையாடினார்கள்.
இந்த மோசமான புகையின் காரணமாக இலங்கை வீரர்கள் அதிக கண் எரிச்சலை சந்தித்து இருக்கிறார்கள். இயற்கை சூழலில் பழகிய அவர்கள் இதில் அதிகம் கஷ்டப்பட்டார்கள். மேலும் பந்து வீசும் போதும், கீப்பிங் செய்யும் போதும் மிகவும் கவனமாக பார்க்க வேண்டும் என்பதால் பவுலர்களும், கீப்பரும் அதிக கண் எரிச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
இந்த மோசமான புகை காரணமாக இலங்கை அணியின் வீரர்கள் நடுவரிடம் போட்டியை நிறுத்தும்படி முறையிட்டனர். மேலும் இலங்கை அணியின் பிட்னஸ் அறிவுரையாளர் நடுவரிடம் இது குறித்து முறையிட்டார். வீரர்களுக்கு சுவாச கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்கள்.
இந்த ‘புகையோ புகை’ பிரச்சனை காரணமாக போட்டி 16 நிமிடம் தடைபட்டது. ஆனால் இலங்கை வீரர்களின் கோரிக்கையை நடுவர்கள் ஏற்கவில்லை. போட்டியை நிறுத்த முடியாது என்று கூறினார்கள். கோஹ்லியும் போட்டியை நிறுத்தாமல் நடத்த வேண்டும் என்று சண்டையிட்டார்.
இந்த நிலையில் இந்த மோசமான புகை காரணமாக அங்கு கூட்டம் மிகவும் குறைவாக இருந்திருக்கிறது. மதியம் போட்டி தொடங்கிய பின் புகை அளவு அதிகம் ஆனதால் பல ரசிகர்கள் வீட்டிற்க்கு திரும்பியுள்ளனர்.
மேலும் கேமராமேன்களும் தெளிவாக வீடியோ எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். இதனால் ரிவ்யூ கேட்பதில் சிக்கல் உருவாகி இருக்கிறது.