Loading...
நாளை மறுதினம் முதல் வங்காள விரிகுடாவை அண்மித்த கடல் பிரதேசங்கள் மற்றும் இலங்கையை சூழவுள்ள கடல் பிரதேசங்களிலும் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
காலநிலை அவதான நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொத்துவில் முதல் திருகோணமலை, கான்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடல் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 30 – 40 கிலோமீற்றர் வரையில் அதிகரிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading...
அத்துடன், இடியுடனான மழைபெய்யும் வேலை கடல் பிரதேசங்கில் காற்றின் வேகம் மணிக்கு 70 – 80 கிலோமீற்றராக அதிகரித்து வீசும்.
எனவே கடற்தொழிலில் ஈடுப்படுபவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் காலநிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
Loading...