தமது முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான மைக்கேல் ஃபிளின்னின் செயல்கள் சட்டப்பூர்வமானது என அமெரிக்க ஜனாதிபதியா டொனாள்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
எஃப்.பி.ஐ-யிடம் பொய் கூறியதற்காகவே அவரை பதவி நீக்கம் செய்ததாகவும் அமெரிக்க ஜனாதிபதியா டொனாள்ட் டிரம்ப சுட்டிக்காட்டியுள்ளார்.
டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு முன்னர் அமெரிக்கா, ரஸ்யா மீது விதித்திருக்கும் தடைகளை அகற்றுவது குறித்து அமெரிக்க சட்டத்திற்கு எதிரான வகையில், ரஸ்ய தூதரோடு கலந்துரையாடியதாக ஃபிளின் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இந்த குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்கும் ஒத்துழைப்பு தருவதாகவும் அவர் ஒப்புக்கொண்டிருந்தார்.
இந்நிலையில், எஃப்.பி.ஐ மற்றும் துணை ஜனாதிபதியிடம் பொய் கூறியதால் தான் அவரை பதவியில் இருந்து விலக்கியதாகவும், பதவியில் இருந்த போது அவரின் நடவடிக்கைகள் அனைத்தும் சட்டப்பூர்வமானது தான் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
மேலும் இதில் ‘மறைப்பதற்கு ஏதுமில்லை’ என்றும் அவர் குறிப்பிட்டார்.