கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அருகில் இருந்த சிறிய இராணுவமுகாம் அகற்றப்பட்ட பின்னர் குளத்தின் அருகில் இருந்த புத்தர் சிலையையும் அகற்றப்பட்டுள்ளது.
இரணைமடு குளத்தின் பொறியியளாலர்கள் அலுவலகம் உள்ள கட்டடத்தில் யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினர் தங்களின் தேவைக்காகவும் யுத்தம் முடிவுற்ற பின்னர் இரணைமடு குளத்தினை பார்வையிடுவதற்கு பெரும் திரளான சிங்கள மக்கள் வருவதுண்டு.
அவர்களின் வழிபாட்டுக்காகவும் அமைக்கப்பட்டதாக கூறப்படும் புத்தர் சிலை அகற்றப்பட்டுள்ளது.
குளத்தின் அபிவிருத்திக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் சுமார் 3000 மில்லியன் நிதியுதவியில் புனரமைக்கப்பட்டு வருகின்றபோது குளத்தின் பொறியியளாரின்அலுவலகம் மீள் புனரமைப்பு காரணத்தால் இராணுவம் அங்கிருந்து வேறு ஓர்இடத்திற்கு மாற்றப்பட்ட பின்னரும் புத்தர் கோவில் குளத்தின் அருகிலே இருந்தது.
குளத்தின் அபிவிருத்திக்கு இடையூறு ஏற்படும் என்ற காரணத்தால் புத்தர் கோவிலிருக்க சிலை மாத்திரம் இராணுவத்திரால் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.