வடகொரியாவுடன் போரிடுவதற்கான சாத்தியக் கூறுகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருப்பதாக அமெரிக்கா கூறி உள்ளது.
கலிஃபோர்னியாவின் சிமி பள்ளத்தாக்கு பகுதியில் நடந்த தேசிய பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் பேசிய வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெக்மாஸ்டர்,
அமெரிக்காவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக வடகொரியா விளங்குவதாகக் கூறினார்.
இதை சமாளிக்க ஆயுதமில்லா வழிகள் பல இருப்பதாகக் கூறிய மெக்மாஸ்டர்,
வடகொரியா மீது சீனா மேலும் பல பொருளாதார தடைகளை விதிக்கலாம் என்று ஆலோசனை கூறினார்.
ஆனால் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், மிகுந்த நெருக்கடி கொடுப்பதால், போருக்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.