கனடாவின் டொராண்டோ நகரில் காணாமல் போன 22 வயதான டெஸ் ரிச்சீ என்ற பெண் கழுத்து நெரித்துக் கொலைசெய்யப்பட்டதாக பொலிசாரின் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் குறித்த பெண் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் தனது நண்பியுடன் கிளப்புக்கு சென்றுள்ளார்.
கிளப்பில் இருந்து வெளியேறும் போது சகோதரிக்கு தொலைபேசி அழபை;பினை மேற்கொண்டுள்ளார்.
ஆனால் சகோதரி தூக்கத்தில் இருந்தமையால் அழைப்பை ஏற்க முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுவே குறித்த பெண்ணிக் கடைசி அழைப்பாகும்.
அதன் பின் டெஸ் ரிச்சீயின் சடலம் சர்ச் ஸ்ட்ரீட் (Church Street) எனும் இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அவரது கழுத்து இறுக்கப்பட்டு காயம் இருந்ததால், கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது டொராண்டோவில் இந்த வருடம் நடைபெற்ற 56வது கொலை என்பதும் குறிப்பிடத்தக்கது.