Loading...
டெல்லி மேக்ஸ் மருத்துவமனையில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்ததாக தவறுதலாக அறிவித்த இரண்டு மருத்துவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
மேக்ஸ் மருத்துவமனையில் கடந்த வரம் குறைப் பிரசவத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைள் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
Loading...
இதையடுத்து குழந்தைகளை இறுதிச் சடங்குகளுக்காக குடும்பத்தினர் கொண்டு சென்றபோது அதில் ஒரு குழந்தை உயிருடன் இருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக இந்திய மருத்துவ சங்கம் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் பணியில் இருந்த மருத்துவர்களான ஏ.பி.மேத்தா, விசால் குப்தா என்ற இருவரை மேக்ஸ் மருத்துவமனை நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது.
Loading...