ஆஸ்திரேலியாவில் ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கான நாடாளுமன்ற விவாதத்தின் போது டிம் வில்சன் என்ற உறுப்பினர், சக ஆண் உறுப்பினரை பார்த்து தம்மை திருமணம் செய்து கொள்ள தயாரா என்று கேட்டார்.
இது தொடர்பான இறுதி விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது ஓரினச் சேர்க்கையாளரான மைய வலது லிபரல் கட்சியின் உறுப்பினர், சக உறுப்பினர் ரியான் போல்கர் ( Ryan Bolger ) ஐ பார்த்து, தம்மை திருமணம் செய்து கொள்ள தயாரா என்று கேட்டார்.
இதற்கு போல்கரும் சம்மதம் தெரிவித்தார். இதனால் அவையில் அனைவரும் கைதட்டி, சிரித்தனர்.