அரச வைத்தியசாலைகளில் காணப்படும் குறைப்பாடுகளின் விளைவாகவே, பொதுமக்கள் தங்களது இயலுமையையும் மீறி தனியார் துறை வைத்தியசாலைகளை நோக்கி செல்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சுகாதார மற்றும் வீடமைப்பு அமைச்சுகளின் ஒதுக்கீட்டுச் சட்டமூல விவாதத்தின் போதே சீனித்தம்பி யோகேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரச வைத்தியசாலைக்கு செல்லும் பொதுமக்கள், பரிசோதனைகளுக்காக தனியார் துறை ஆய்வு கூடங்கள் அல்லது வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக சீனிதம்பி யோகேஸ்வரன் குற்றம் சுமத்தினார்.
இதற்கு பதில் வழங்கிய சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, இது முற்றிலும் பிழையானது என்றும், அவ்வாறான சம்பவங்கள் பதிவானால் அது குறித்து முறைப்பாடு செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளமயும் குறிப்பிடத்தக்கது.