சுகாதார சேவையை கணினி மயப்படுத்தினால், தவறுகள் ஏற்படுவது குறையும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சு மற்றும் வீடமைப்பு அமைச்சு என்பவற்றுக்கான நிதி ஒதுக்கம் குறித்த குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே சிவமோகன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான வீடமைப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும் சிவமோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதன்போது பதில் வழங்கிய வீடமைப்புத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச, வடக்கு கிழக்கில் வீடமைப்பு நடவடிக்கைகளுக்காக 30ஆயிரம் லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
எவ்வாறாயினும், வீடமைப்பு திட்டங்களை அமுலாக்கும் போது, அரசாங்கம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் விபரங்களின் அடிப்படையில் பயனாளிகளை தெரிவு செய்ய வேண்டும் என்றும் சிவமோகன் கோரினார்.
இதற்கு பதில் வழங்கிய அமைச்சர் சஜித் பிரேமதாஸ, பயனாளிகளையும், காணிகளையும் தெரிவு செய்து வழங்குவது, நாடாளுமன்ற உறுப்பினர்களான உங்களது பொறுப்பு என்று சுட்டிக்காட்டினார்.