இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற 410 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டெல்லி ஃபெரோஸ் சா கோட்லா மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கிய இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 536 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் ஆனது.
இதை அடுத்து ஆடிய இலங்கை அணி நான்காம் நாள் தொடக்கத்தில் 373 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது.
இதனால் 163 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடியது.
தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் விரைவாக ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து ரகானேவும் வெளியேறியதால் இந்திய அணிக்கு தொடக்கம் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்தது.
பின்னர் விளையாடிய வீரர்கள் சற்று நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிகார் தவான் அரை சதம் அடித்து அவுட்டான நிலையில், கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரும் அரை சதம் அடித்தனர்.
இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 246 ஓட்டங்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்வதாக கேப்டன் விராட் கோலி அறிவித்தார்.
இதனால் இந்த ரன்கள் மற்றும் முன்னிலை ரன்களை சேர்த்து இலங்கைக்கு 410 ஓட்டங்கள்; இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இன்னும் ஒரு நாள் மீதம் இருப்பதால் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என கருதப்படுகிறது.