ஏமன் நாட்டில் முன்னாள் ஜனாதிபதி அலி அப்துல்லா சாலே கொல்லப்பட்டதால் ஆத்திரம் அடைந்த ஆதரவாளர்கள் ஈரான் நாட்டு தூதரகத்தை தீ வைத்து எரித்தனர்.
5 ஆண்டுகளுக்கு முன் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகிய சாலே ஹவுதி புரட்சி படையினருடன் இணைந்து தற்போதைய ஏமன் ஜனாதிபதி அப்த்ரபுத் மன்சூர் ஹாதிக்கு எதிராக போராடி வந்தார்.
இதனிடையே சில நாட்களுக்கு முன்பு சாலே ஆதரவாளர்களுக்கும் ஹவுதி புரட்சி படையினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து இருதரப்பினரும் கடும் சண்டையில் ஈடுபட்டனர்.
அலி அப்துல்லா சாலே சுட்டுக்கொல்லபட்டார்.
அப்துல்லா சாலே கொல்லபட்டதால் ஆத்திரமடைந்த ஆதரவாளர்கள் ஏமனில் உள்ள ஈரான் தூதரகத்தை தாக்கி தீ வைத்து எரித்தனர்.
இதனால் அங்கு பதற்றம் நிலவி வருவதையடுத்து பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏமன் ஜனாதிபதியாக 30 ஆண்டுகள் மேலாக பதவி வகித்து வந்தவர் அலி அப்துல்லா சாலே, 75 வயதான அவர் கடந்த 2012-ம் ஆண்டு ஏற்பட்ட அரேபியா புரட்சியால் அரசியல் நெருக்கடிக்கு பணிந்து பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.