தமிழ் மக்களின் விடுதலைக்கான போராடி உயிர்நீத்தவர்களை நினைவு கூறும் மாவீரர் தினமானது மீண்டும் ஆயுத போராட்டத்தை நியாயப்படுத்தும் ஒரு செயற்பாடு என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அமைப்பாளரான அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஆயுத போராட்டத்தின் அழிவுகளை அனுஷ்டிக்கும் தினமாக மாவீரர் தினத்தை தான் கருதவில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த 27 ஆம் திகதி மாவீரர் தினம் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவினால் ஆரம்பிக்கப்பட்ட எலிய என்ற எதிர்பார்ப்புக்களை ஒளியேற்றும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அருண் தம்பிமுத்து இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
அத்துடன் அரசியலமைப்பு சீர்திருத்தமானது நாட்டின் எதிர்கால கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்படவில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.