பிரபல தனியார் தொலைக்காட்சியில் பல வருடங்களாக நடத்தும் நிகழ்ச்சி தான் சொல்வதெல்லாம் உண்மை.
இந்த நிகழ்ச்சியை கலாய்க்காதவர்கள் இல்லை. இந்த நிகழ்ச்சியை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார்.
இதனால் இவர் மேல் பல சர்ச்சைகளும் அவ்வப்போது கிளம்பும்.
இந்த நிகழ்ச்சி பொறுத்தவரை இவர் பலரின் குடும்ப பிரச்னையை சரி செய்வதற்காக இருதரப்பு வீட்டாரிடமும் பேசுவார்.
அதில் சில நேரங்களில் மிகவும் மோசமாக பேசுவார்.
இவரை போல் மற்ற ஒரு பிரபல தொலைக்காட்சியிலும் நடிகை குஷ்பூவை வைத்து இது போல் ஒரு நிகழ்ச்சி எடுத்தனர்.
அவர் இவரை விட ஒரு படி மேல் சென்று தவறு செய்தவரை அடித்தே விடுவார்.
இந்த மாதிரி நிகழ்ச்சிகளால் பல சர்ச்சைகள் எழுவது வழக்கமாகவே இருக்கிறது.
மேலும், தற்போது லட்சுமி ராமகிருஷ்ணனை நிகழ்ச்சியை விட்டு வெளியேறும்படி அந்த நிகழ்ச்சி உரிமையாளர் கேட்டுக்கொண்டது போல் ட்விட்டரில் ஒரு காணொளி விரலாக பரவுகிறது.
இதன் காரணம் என என்று ஒன்றும் புரியவில்லை.
நிகழ்ச்சியின் ப்ரோமோஷனிற்காகவா இல்லை உண்மையில் அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேற போகிறாரா என்று தெரியவில்லை.