இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் துடுப்பாட்ட வீரர்கள் பொறுப்பாக ஆட இலங்கை அணி ஆட்டத்தை சமன் செய்தது.
ஆனாலும், இலங்கையுடனான டெஸ்ட் தொடரை வென்ற இந்தியா உலக சாதனையை சமன் செய்தது.
இந்தியா – இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 536 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.
இலங்கை அணி முதல் இன்னிங்சில் 373 ரன் எடுத்தது.
கேப்டன் சன்டிமால் (164 ரன்), முன்னாள் கேப் டன் மேத்யூஸ் (111 ரன்) ஆகியோர் சதம் அடித்தனர். அஸ்வின், இசாந்த் சர்மா தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.
163 ரன்கள் முன்னிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை ஆடியது.
5 விக்கெட் இழப்புக்கு 246 ரன் எடுத்து இருந்த போது டிக்ளேர் செய்தது.
தவான் 67 ரன்னும், வீராட் கோலி, ரோகித் சர்மா தலா 50 ரன்னும் எடுத்தனர்.
410 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கிய இலங்கை அணி 4-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 31 ரன் எடுத்து இருந்தது.
தனன் ஜெயா சில்வா 13 ரன்னிலும், மேத்யூஸ் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.
இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. ஆட்டம் தொடங்கியவுடன் மேத்யூஸ் 1 ரன்னில் வெளியேறினார்.
அப்போது இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 35 ரன்னாக இருந்தது.
அடுத்து களமிறங்கிய கேப்டன் சன்டிமால் நிதானமாக விளையாடினார். தனன்ஜெயாவுடன் இணைந்து 112 ரன்கள் எடுத்தார்.
சண்டிமால் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது 5 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்திருந்தது.
இதையடுத்து, தனன்ஜெயாவுடன் ரோசன் சில்வா ஜோடி சேர்ந்தார்.
தனன்ஜெயா 119 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார்.
அவருக்கு பதிலாக டிக்வெலா இறங்கினார். ரோசன் சில்வாவும், டிக்வெலாவும் இணைந்து 94 ரன்கள் ஜோடி சேர்த்து அணியை தோல்வியில் இருந்து மீட்டனர்.
இறுதியில், இலங்கை அணி 103 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் எடுத்துள்ளது.
இதைத்தொடர்ந்து, இந்தியாவுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியை இலங்கை அணி போராடி டிரா செய்துள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது தொடர்ந்து 8 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது.
இப்போது இலங்கையுடனான டெஸ்ட் தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி உலக சாதனையை சமன் செய்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக அதிக தொடர்களை ருசித்த அணியாக இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் திகழ்கிறது.
அந்த அணிகள் தொடர்ந்து 9 தொடர்களை வசப்படுத்தி இருந்தது.
இந்த உலக சாதனையை இந்தியா இன்று சம்ன் செய்து அசத்தியுள்ளதால் பலரும் இந்திய அணிக்கு தங்களது பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர்.