பிரிட்டன் பிரதமர் தெரசா மே-யை கொலை செய்யும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பாக தற்கொலைப்படைத் தீவிரவாதிகள் 2 பேரை கைது செய்துள்ளதாகவும் லண்டன் பொலீசார் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டன் பிரதமர் தெரசா மே-வை கொலை செய்வதற்காக, அவர் நாள்தோறும் பயணிக்கும் லண்டனில் உள்ள டவ்னிங் தெருவில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அதை அகற்றிய லண்டன் போலீசார், வெடிகுண்டுகள் வைத்தும், தற்கொலைத் தாக்குதல் நடத்தியும், தெரசா மே-வை கொலை செய்ய திட்டமிட்டதாக நைமூர் சக்காரியா ரஹ்மான் மற்றும் மொகமெத் அகீப் இமான் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர்.
அவர்கள் இருவரும் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே, தெரசா மே-வை கடந்த ஓராண்டில் 9 முறை கொலை செய்ய சதித்தீட்டம் தீட்டப்பட்டதாகவும், அவை அனைத்தும் முறியடிக்கப்பட்டதாகவும் பிரிட்டன் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.