புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் அண்ணன் வேலுப்பிள்ளை மனோகரன் டென்மார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.
இந்நிகழ்வில் மக்களுடன் மக்களாக சாதாரண ஒரு மனிதனாக அமர்ந்திருந்தார் மகேந்திரன் என்று பார்த்தவர்கள் பேசிக்கொண்டுள்ளனர்.
ஆனாலும் புலிகளின் தலைவரது உடன் பிறந்த சகோதரன் என்ற கர்வமோ நினைப்போ சிறிதளவு கூட இல்லாமல் மக்களுடன் சர்வ சாதாரணமாக பழகியுள்ளார்.
முன்வரிசைக்கு வந்து அமருங்கள் என்று அழைத்தபோது அந்த மரியாதையைப் பெற மனமில்லாத அதேவேளை தங்களை உதாசீனம் செய்தது போன்றும் இருந்துவிடக்கூடாது என்ற மனநிலையில் தயங்கித் தயங்கி முனவரிசைக்கு வந்தமர்ந்துள்ளார்.
அதுமட்டுமல்லாது ஊடகர் காந்தரூபன் பேசிய பொழுது அவரும் எழுந்து நின்றே காந்தரூபனுடன் பேசினார்.
தலைவரின் தன்னடக்கம் பற்றி அவருடன் நெருங்கிப்பழகிய பலர் கூறக்கேட்டிருக்கின்றேன். தலைவரின் தமையன் ஊடாக அதனைப் பார்த்தேன் என ஊடகவியலாளர் மெய்சிலிர்த்தார்.