நாட்டுப்பற்றிருந்தால் தங்களுடைய புதிய கூட்டணியில் வந்து இணையுமாறு வீ.ஆனந்தசங்கரி அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த கால கூட்டமைப்பு போன்று தனிக்கட்சி அதிகாரம் இங்கில்லை எனவும் வீ.ஆனந்தசங்கரி சுட்டிக்காட்டியுள்ளார்.
கிளிநொச்சியில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று (08) இடம்பெற்ற பத்திரிகையார் சந்திப்பிலேயே வீ.ஆனந்தசங்கரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொய் மற்றும் குற்றச்சாட்டுகள் சுமத்துவதனை விடுத்து, வந்து தம்முடன் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
கஜேந்திரகுமார் அரசியலில் பால்குடி. நான் நாடாளுமன்ற போகும் போது அவர் பிறக்கவில்லை. ஆகவே அவர் வாய் திறக்கும் போது யோசித்துவிட்டு திறக்க வேண்டும் என்றும் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
தான் கஜேந்திரகுமாரின் தந்தை, பேரன் உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவர்களுடன் சேர்ந்து அரசியல் செய்துள்ளதாகவும் வீ.ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே வரலாறு தெரியாது பேசுவது சிறுபிள்ளைத் தனமானது. 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க சமஸ்டி தீர்வை முன்வைத்தே தேர்தலில் போட்டியிட்டவர்.
அவருக்கு எதிராக மஹிந்த போட்டியிட்டவர். ஆனால் கஜேந்திரகுமார் தரப்பினர் ரணிலுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று மக்களை வலியுத்தினார்கள். இது சமஸ்டிக்கு வாக்களிக்க வேண்டாம் என்பதே.
இதனை அவர் மறந்திருக்க முடியாது. வரலாறு இப்படியிருக்க நாங்கள் வடக்கு கிழக்கு இணைப்பை பேசவில்லை என்று கூறுவது சுத்தப்பொய்.
அத்துடன் சம்பந்தன் தற்போது இருக்கும் கதிரை தன்னுடையது என தெரிவித்த வீ.ஆனந்தசங்கரி எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தான் கூறவில்லை எனவும் மற்றைய பதவி என்னுடையது.
தான் பல விட்டுக்கொடுப்புக்களை செய்துள்ளதாகவும் வீ.ஆனந்தசங்கரி மேலும் தெரிவித்துள்ளார்.