தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாகச் செயற்படவேண்டும் என மேற்குலக நாடுகள் வலியுத்தி வருவதாக கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியொன்றின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஒற்றுமையை சீர்குலைக்கும்; வகையில் நடவடிக்கைகளை எடுக்கவேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.
கொழும்பிலுள்ள மேற்குலக நாடுகளின் தூதரகங்கள் ஊடாகவும், பல நாடுகளின் தூதரகங்கள் ஊடாகவும் இவ்வாறு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக பங்காளிக் கட்சியொன்றின் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஆசனப்பங்கீட்டு விவகாரத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகுவதாக ரெலோ அறிவித்திருந்தமையும் அனைவரும் அறிந்ததே
இதனையடுத்து கொழும்பிலுள்ள மேற்குலக நாடுகளின் தூதரகங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் தொலைபேசி ஊடாக பேசியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கூட்டமைப்பாகச் செயற்படவேண்டும் என்று கண்டிப்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்டது என்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியொன்றின் தலைவர் கூறியுள்ளார்.