யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 33ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று காலை ஆரம்பமானது.
மங்கல இசை முழங்க பாராம்பரிய கலாச்சாரமுறைப்படி பட்டதாரிகள் மற்றும் விரிவுரையாளர்கள் பேராசிரியர்கள் ஆகியோர் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு முதன்மை மண்டபத்தில் பட்டம் வழங்கும் நிகள்வுகள் நடைபெற்றன.
மூதவையால் பரிந்துரைக்கப்பட்ட சகல பட்டதாரிகளுக்கும் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் பட்டங்கள் வழங்கிவைத்தார். அவர்களை பட்டதாரிகளாக அறிவித்தார்
யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் அனைத்து மதங்களின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, ஈஸ்வரபாதம் சரவணபவன் ஆகியோரும் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.
33ஆவது பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி அடுத்த வருடம் மார்ச் மாதம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.