Loading...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்மை நிலையை வெளிப்படுத்த கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் சோசலிச கட்சியின் ஒழுங்கமைப்பில் இன்று மதியம் 12.40 மணியளவில் யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக இடம்பெற்றுள்ளது.
Loading...
ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்மை நிலையை வெளிப்படுத்து என்னும் கோசத்தையும் எழுப்பியுள்ளர்.
மேலும், இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் வட,கிழக்கு மாகாணங்களை சேர்ந்த மற்றும் தென்னிலங்கையை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Loading...