Loading...
அதிக அளவு காற்று மாசுபட்ட சூழ்நிலையில் கிரிக்கெட் போட்டி நடத்தியது குறித்து இந்தியக் கிரிக்கெட் வாரியத்துக்கு இந்திய மருத்துவ சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
டெல்லியில் இந்திய -இலங்கை அணிகள் விளையாடிய மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி வெற்றிதோல்வியின்றிச் சமனில் முடிந்தது.
Loading...
புகைமூட்டத்தால் காற்றுமாசுபட்டிருந்த சூழ்நிலையில் போட்டியை நடத்தியது சர்ச்சையை எழுப்பியுள்ளது.
இது குறித்து இந்தியக் கிரிக்கெட் வாரியத்துக்கு மருத்துவ சங்கம் கடிதம் எழுதியுள்ளது. அதில் போட்டி நடத்துவதற்கு ஏற்றதாக மைதானம் உள்ளதா என்பதைத் தீர்மானிக்க மழை, வெளிச்சமின்மை ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்வதுபோல், சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.
Loading...