எந்த காரணங்களுக்காகவும் கூட்டமைப்பிலிருந்து வெளியேறவேண்டாம் என பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை விநயமாகக் கேட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு ஜனநாயகக் கட்சி என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கூட்டமைப்பு ஒரு குடும்பம் போன்றது என தெரிவித்துள்ள இரா.சம்பந்தன் குடும்பத்துக்குள் சிறுசிறு பிரச்சினைகள், தவறுகள் வருவது வழமையானது என்றும் குறிப்பிட்டுள்ளார்
ஆனால் இதை யாரும்; பெரிதுபடுத்தக்கூடாது என்றும் இரா.சம்பந்தன் குறிப்pட்டுள்ளார்.
வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என தெரிவித்துள்ள இரா.சம்பந்தன் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நெருங்கும் வேளையில் இந்தக் கூட்டமைப்பை பிளவுபடுத்த உள்ளுக்குள்ளும் வெளியிலும் சிலர் கங்கணங்கட்டிச் செயற்பட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே அவ்வாறான செயற்பாடுகளுக்கு துணைபோக வேண்டாம் எனவும் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அனைவரும் ஒற்றுமையுடன் ஓரணியில் திரண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலை ‘வீடு’ சின்னத்தில் எதிர்கொண்டு வடக்கு, கிழக்கில் சரித்திரம் படைக்க வேண்டும் எனவும் தனக்கு அதில் நம்பிக்கை எனக்கு உண்டு என்றும் இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் ஆசனப் பங்கீட்டு விவகாரத்தைப் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ள இரா.சம்பந்தன்
குறித்த விவகாரம் தொடர்பாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடனும் தொலைபேசியில் நான் பேச்சு நடத்தியுள்யதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இறுதி முடிவு நல்லதாக அமையும் என தெரிவித்துள்ள இரா.சம்பந்தன் கூட்டமைப்பின் மூன்று பங்காளிக் கட்சிகளான, தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட் ஆகியன ஒற்றுமையுடன் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.