Loading...
உள்ளுராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இன்று கொழும்பில் இடம்பெறவுள்ளதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனுடன் இலங்கை தமிழரசு கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ் மக்கள் விடுதலை கழகம் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Loading...
தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் நோக்கில் இக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்தார்.
Loading...