கட்சிகளை பிளவுபடுத்தி தேர்தலில் வெற்றிபெறுவதற்கான தேவைப்பாடு தமது கட்சிக்கு இல்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கபீர் ஹசீம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமது ஆட்சிக் காலத்திலேயே கண்ணுக்குத் தெரியும் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக மகிந்த ராஜபக்ஸ கூறுவதாக தெரிவித்த கபீர் ஹசீம் நாட்டின் காணிகள் விற்கப்பட்டு தாமரை கோபுரம், சங்ரீலா விடுதிகள் போன்றவை கட்டப்பட்டமையே கண்ணுக்குத் தெரியும் அவரது அபிவிருத்தி பணி எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் மக்களின் உடல்கள் உணரும் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கட்சிகளை பிளவுபடுத்தி அரசியல் நடத்தும் நிலைப்பாட்டில் ஐக்கிய தேசிய கட்சி இல்லையென கபீர் ஹசீம் மேலும் தெரிவித்துள்ளார்.