குருநாகல் – தம்புள்ளை வீதியில் தலகிரியாகம பகுதியில், பிரதான பாதைக்கு அருகில் கடும் காயங்களுடன் நபரொருவரின் சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.
இருப்பினும், உயிரிழந்தவர் யார் என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர் 25 – 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் என்பதோடு, அவரது தலை, முகம் மற்றும் பாதங்களில் பாரிய காயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, இவர் விபத்துக்குள்ளானாரா அல்லது ஏதேனும் குற்றச் செயலா என்ற கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முடக்கி விட்டுள்ளதாக கலேவலை பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும், குறித்த நபரை இதற்கு முன்னர் அப் பகுதியில் பார்த்ததேயில்லை என அப் பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.