Loading...
சித்திரவதைகளுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் சார்பு சாசனத்தை ஏற்றுக்கொள்வதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலன்னே தமது டுவிட்டர் தளத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.
சித்திரவதை மற்றும் பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது தண்டனைக்கு எதிரான சாசனத்துக்கு அமைவான நெறிமுறை கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி நடைமுறைக்கு வந்துள்ளது.
Loading...
ஐக்கிய நாடுகளின் இந்த சார்பு சாசனத்தை கடந்த 05 ஆம் திகதி இலங்கை ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்த சாசனமானது, அடுத்த வருடம் ஜனவரி மாதம் 4 ஆம் திகதி தொடக்கம் இலங்கையில் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...