தனது அறைக்குள் இருந்து கஞ்சா பீடீ குடித்த பிரபல பாடசாலை மாணவனான மகனை அடித்து முறித்தார் தந்தை. தற்போது கை முறிவடைந்த நிலையில் வைத்தியசாலையில் மகன் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
இச் சம்பவம் நேற்று முன்தினம் யாழ் கொக்குவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தனது அறையைப் பூட்டிவிட்டு படிப்பது என்ற போர்வையில் கஞ்சா பாவித்து வந்துள்ளான். மகன் அறையைப் பூட்டிவிட்டு படிப்பது தொடர்பாக சந்தேகம் கொண்ட தந்தை மகனது அறைக்குள் அதிரடியாக சோதனை நடாத்தியுள்ளார்.
மகனின் பாடசாலை புத்தகங்களுக்கு நடுவில் பீடி கிடந்ததை பார்த்து சந்தேகப்பட்ட தந்தை அந்த பீடியை ஆராய்ந்து பார்த்த போது அது கஞ்சா கலந்த பீடீ என அறிந்துள்ளார்.
வெளியே சென்று திரும்பிய மகனை இது தொடர்பாக கேட்ட போது தனக்குத் தெரியாது என கூறவே தந்தை தாக்குதல் நடாத்தியதாக தெரியவருகின்றது.
தந்தையின் தாக்குதலில் உண்மையைச் சொன்ன மகனை மேலும் கடுமையாக தந்தை தாக்கியுள்ளார்.
தடுக்க வந்த தாய் மற்றும் 15 வயது மகளுக்கும் தந்தையால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
தும்புத்தடியால் அடித்து கைகள் முறிந்த நிலையில் மயக்க நிலைக்கு வந்த மகனை அயலவர்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரியவருகின்றது.
மகனை தாக்கிவிட்டு மகனின் அறைக்குள் புகுந்து தந்தை தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்ற போது அவரையும் அயலவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
கஞ்சா பாவித்த மாணவனின் தந்தை அரச அதிகாரி எனவும் தாய் ஆசிரியை எனவும் தெரியவருகின்றது.