ஈராக் நாட்டை ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் இருந்து முழுமையாக மீட்டு விட்டதாக ஈராக் பிரதமர் ஹைதர் அல்-அபாடி அறிவித்துள்ளார்.
சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் மேலோங்கி இருந்தபோது ஈராக்கில் உள்ள மொசூல் மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்கள் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தது.
தாங்கள் கைப்பற்றிய பகுதிகளை தனி நாடாக அறிவித்து ஆட்சிசெய்து வந்தமையும் அனைவரும் அறிந்ததே
அவர்களின் ஆதிக்கத்தை ஒடுக்க ஈராக் ராணுவத்துக்கு அமெரிக்கா கை கொடுத்தது.
அமெரிக்க விமானப் படையின் உதவியுடன ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் இருந்த மொசூல் நகரம் சமீபத்தில் முழுமையாக மீட்கப்பட்டது.
அதை தொடர்ந்து தீவிரவாதிகள் வசம் இருந்த மேலும் சில நகரங்கள் படிப்படியாக கைப்பற்றப்பட்டன.
இந்த நிலையில் அவர்கள் வசம் இருக்கும் கடைசி நகரமான தல் அபர் பகுதியை மீட்க தாக்குதல் நடத்துமாறு ஈராக் ராணுவத்துக்கு பிரதமர் ஹைதர் அல்-அபாடி கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, முன்னதாக மீட்கப்பட்ட மொசூல் நகரில் இருந்து 80 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தல் அபர் நகருக்குள் ராணுவ டாங்கிகளுடன் ஏராளமான வீரர்கள் புகுந்தனர்.
இந்நிலையில், ஈராக் நாட்டை ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் இருந்து முழுமையாக மீட்டு விட்டதாக ஈராக் பிரதமர் ஹைடர் அல்-அபாடி இன்று அறிவித்துள்ளார்.