Loading...
வவுனியாவில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் விமானப்படை வீரர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
அத்துடன் பொது மக்களின் உதவியுடன் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Loading...
வவுனியா, கண்டி வீதியில் இடம்பெற்ற குறித்த விபத்தின்போது வன்னி விமானப்படைத் தளத்தில் பணியாற்றும் விமானப்படை வீரர் ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
வன்னி விமானப்படைத் தளத்திற்கு அருகில் சென்றுக்கொண்டிருந்த விமானப்படை வீரரின் துவிச்சக்கரவண்டியினை, நுவரெலியாவில் இருந்து வந்த மோட்டார் கார் மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...