அமெரிக்காவில் நடைபெற்ற குத்துச் சண்டையில் இங்கிலாந்து வீரரின் காது கிழிந்து தொங்கியதால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் உள்ள சின் சிட்டியில் நேற்றிரவு குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் மெக்சிகோவின் பிரான்சிகோ வர்காஸ் – இங்கிலாந்தின் லிவர்பூலைச் சேர்ந்த ஸ்டீபன் ஸ்மித் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.
உலக சாம்பியனுக்காக நடைபெற்ற இந்த போட்டியில் மெக்சிகோ வீரர் பிரான்சிஸ்கோ வர்காஸ் ஆதிக்கம் செலுத்தினார். இவரது தாக்குதலுக்கு ஸ்டீபன் ஸ்மித்தால் ஈடுகொடுக்க முடியவில்லை.
9-வது சுற்றின்போது பிரான்சிஸ்கோ வர்காஸ் குத்தியதில் ஸ்டீபன் ஸ்மித்தின் காது கிழிந்து தொங்கியது.
ரத்தம் சொட்ட சொட்ட நின்ற ஸ்டீபன் ஸ்மித்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருந்தாலும் ஸ்டீபன் ஸ்மித் அடுத்த ரவுண்டிற்கு தயாரானார்.
ஆனால், ரிங்சைடு டாக்கடர் அவரை விளையாட அனுமதிக்கவில்லை. இதனால் போட்டி அத்துடன் நிறுத்தப்பட்டது. இதனால் வர்காஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
வீரரின் காது கிழிந்ததும், ரசிர்களுக்கு மைக் டைசன் ஹோலி பீல்டிங் காதை கடித்ததுதான் நியாபகத்திற்கு வந்து சென்றது.