இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டி தற்போது இந்தியாவின் தர்மசாலா மைதானத்தில் இடம்பெற்றுவருகின்றது.
முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி ஒரு கட்டத்தில் 38.1 ஓவர்கள் நிறைவில் 112 ஓட்டங்களுக்கு 9 விக்கட்டுக்களை இழந்துள்ளது.
பந்து வீச்சில் சுரங்க லக்மால் 4 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
அவர் இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா , கார்த்திக், பாண்டே மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோரின் விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.
மெத்திவ்ஸ் , சிகர் தவானி விக்கட்டை கைப்பற்றினார்.
இரண்டு விக்கட்டுக்களை பெற்றுக்கொண்டுள்ள நுவன் பிரதீப் ,சிரியாஸ் ஐயர் மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோரின் விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
மேலும் , இந்த போட்டித் தொடரிபல் இருந்து இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக , இந்திய அணியின் தலைமைப் பொறுப்பு ரோஹித் சர்மாவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.