Loading...
முல்லைத்தீவு – முள்ளியவளை துயிலுமில்லத்தை இராணுவத்தினர் மேலும் பலப்படுத்தி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இறுதி யுத்தத்தின் போது இந்த துயிலுமில்லத்தை ஆக்கிரமித்த இராணுவத்தினர், மாவீரர் கல்லறைகள் உள்ளிட்ட கட்டடங்களை அழித்து அவ்விடத்தில் நிலை கொண்டுள்ளனர்.
Loading...
இவ்வாறான சூழ்நிலையில் இந்த ஆண்டு கார்த்திகை மாதம் 27ஆம் திகதி நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வை குறித்த துயிலுமில்ல வளாகத்தில் பொதுமக்கள் அனுஸ்டித்துள்ளனர்.
இதையடுத்து குறித்த துயிலுமில்லத்தில் புதிய காவலரண்களை அமைக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் தற்பொழுது ஈடுபட்டுள்ளதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Loading...