உள்ளூராட்சி தேர்தலை வென்றெடுத்து மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் சாவகச்சேரி நகரசபைக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்தபின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் தாங்கள் பெறும் வெற்றியானது மக்களின் வெற்றியாகவே தாம் கருதுவதாகவும் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் குறித்த தேர்தலில் வெற்றி நிச்சயம் எனவும் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
உள்ளூராட்சி சபை தேர்தலில் தாங்கள் பெறும் வெற்றியானது மக்களின் வெற்றியாக அமையும் என தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா குறித்த வெற்றிக்கூடாக மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சினை, அபிவிருத்தி, மற்றும் அரசியல் உரிமைகள் உள்ளிட்டவற்றிற்கான தீர்வினை பெற்று தரவுள்ளதாகவும் உறுதியளித்துள்ளார்.
அத்துடன் யாழ் மாவட்டத்தை பொறுத்தவகையில் 17 உள்ளூராட்சி மன்றங்களிலும் தமது கட்சியின் சின்னமான வீணைச் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.
இதுபோல முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா ஆகிய பிரதேச சபைகளிலும் தாம் வீணைச் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, மற்றும் திருகோணமலை, மாவட்டங்களின் பிரதேச சபைகளிலும் போட்டியிடவுள்ளதாக தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி எக்காலத்திலும் பிரிக்கப்பட முடியாத வடகிழக்கு ஓர் தனி அலகு என்பது தமது கட்சியின் நிலைப்பாடாகும் என்றும் தெரிவித்துள்ளார்.