Loading...
யாழ்ப்பாண சாவகச்சேரி நகர சபை தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை ஐக்கிய தேசிய கட்சி இன்று செலுத்தியுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் தலைமையிலான குழுவினர் இந்த கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
இதேவேளை, ஸ்ரீ லங்கா பொது ஜன முன்னணி இன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.
Loading...
கிளிநொச்சி மாவட்ட தேர்தல் செயலகத்தில் இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
வடமேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம் ரஞ்சித் தலைமையிலான குழுவினரே கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
Loading...