குறைந்த ஓட்ட எண்ணிக்கையில் படுதோல்வியை தழுவவிருந்த இந்திய அணி தனி ஒரு வீரரின் பொறுப்பான ஆட்டத்தினால் சாதாரண தோல்வியை தழுவிக்கொள்ள முடிந்துள்ளதாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான சுரங்க லக்மால் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியுடனான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் வெற்றிக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் சுரங்க லக்மால் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் பொறுப்பு மிகுந்த வீரர் மகேந்திர சிங் தோனியின் ஆட்டமே அதற்கு வழிசமைத்திருந்தது என சுரங்க லக்மால் தோனிக்கு புகழாரம் சூடியுள்ளார்.
இந்திய அணி 29 ஓட்டங்களுக்கு 7 விக்கட்டுக்களை இழந்தபோது, 40 ஓட்டங்களுக்குள் சுருட்டி விடலாம் என நினைத்தாகவும் சுரங்க லக்மால் தெரிவித்தார்.
ஆனால் தோனி சிறப்பாக துடுப்பெ:த்தடியதாகவும் அவரை மட்டும் விரைவில் வீழ்த்தியிருந்தால் தாங்கள் இந்தியாவை மோசமான ஓட்ட எண்ணிக்கையில் வீழ்த்தி இருக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் 1986 ஆம் ஆண்டு 78 ஓட்டங்களிலும், 2000 ஆம் ஆண்டு 54 ஓட்டங்களிலும் இந்திய அணி சகல விக்கட்டுக்களையும் இழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.