கடந்த சில தினங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த தொடரூந்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.
இன்று அமைச்சரவை குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, போராட்டத்தைக் கைவிடத் தீர்மானித்துள்ளதாக, தொடரூந்து தொழிற் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த புதன்கிழமை நள்ளிரவு முதல் தொடரூந்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, பல அதிகாரிகள் இது குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டும், அது பலனளிக்காது போராட்டம் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்தநிலையில், பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்ட தொடரூந்து தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் சம்பந்தமாக ஆராய்வதற்காக அமைச்சரவை குழுவொன்று, அமைச்சர் சரத் அமுனுகம தலைமையில் நியமிக்கப்பட்டது.
நான்கு பேர் அங்கம் வகிக்கும் இந்தக் குழுவுடன், இன்று இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்தும், தமது வேலைநிறுத்தத்தைக் கைவிடத் தீர்மானித்துள்ளதாக, தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன.