அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பின்படி இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலத்தை இலங்கை ஏற்றுகொள்ளாது.
சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான ராஜித சேனாரத்ன அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இவ்வாறு குறிப்பிட்டார்.
இஸ்ரேலின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டுள்ள ஜெருசலத்திற்கு நாங்கள் போகமாட்டோம். எமது இலங்கைக்கான தூதரகம் ரெல் அவி நகரத்தில் மாத்திரமே அமைந்து இருக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதியின் இஸ்ரேல் தலைநகர அறிவிப்பு குறித்து இலங்கை தனது நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்துள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலத்தை மேற்குலக நாடுகளும் ஏற்று கொள்ளவில்லை என்று தெரிவித்த அமைச்சர் பலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை சர்வ கட்சிகளின் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக மக்களுக்கு தெளிவுப்படுத்தப்படும். இந்த கூட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு புதிய நகர மண்டபத்தில் நடைபெறவிருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.