சர்வதேச ஒருநாள் அரங்கில் மூன்று இரட்டைச் சதங்களை விளாசிய ஒரே வீரராக இந்தியாவின் ரோஹித் சர்மா வரலாறு படைத்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவர் தனது மூன்றாவது இரட்டை சதத்தை எட்டினார்.
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி மொஹாலியில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா ஆரம்பம் முதலே அபாரமாக ஓட்டங்களைக் குவித்தது.
சிகர் தவான் 68 ஓட்டங்களையும் ஸ்ரேயாஷ் ஐயர் 88 ஓட்டங்களையும் பெற்றனர்.
அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ரோஹித் சர்மா 208 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் குவித்தார்.
153 பந்துகளை எதிர்கொண்ட அவர் 12 சிக்ஸர்கள், 13 பௌண்டரிகளை விளாசினார்.
இது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இலங்கைக்கு எதிராக ரோஹித் சர்மா பெற்ற இரண்டாவது இரட்டைச் சதமாகும்.
இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 392 ஓட்டங்களைக் குவித்தது